புத்ரா ஜெயா, ஏப் 5 – வர்த்தகர்களுக்கு எதிரான Ops Pantau நடவடிக்கையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 500,000 ரிங்கிட்டிற்கும் அதிகமான அபராத தொகைக்கான குற்றப்பதிவுகள் வழங்கப்பட்டன. மார்ச் 12 ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 4ஆம் தேதிவரை மேற்கொள்ளப்பட்ட அந்த நடவடிக்கையின்போது விலைப்பட்டியலை வைக்கத் தவறியது, முறையான எடை கருவிகளை கொண்டிருக்காதது மற்றும் போலி பொருட்களை விற்பனை செய்தது போன்ற குற்றச் செயல்களுக்காக 164 குற்றப் பதிவுகள் வழங்கப்பட்டதாக உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சர் டத்தோ Armizan Mohd Ali தெரிவித்தார்.
பொருட்களின் விலைகளை வர்த்தகர்கள் கண்டபடி உயர்த்தாமல் இருப்பதற்காகவும் வர்த்த சட்டவிதிகளை அவர்கள் பின்பற்றுவதை உறுதிப்படுத்தும் பொருட்டு நாடு முழுவதிலும் உள்ள 38, 126 வர்த்தக மையங்களில் அமைச்சு பரிசோதனை நடத்தியதாக இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.