கோத்தா பாரு, அக்டோபர்-2, UMT எனப்படும் மலேசிய கிளந்தான் பல்கலைக்கழகத்தில் தனது மகளின் மேற்படிப்புக்கான பதிவுக் கட்டணத்தைச் செலுத்த வசதியில்லாமல், WhatsApp வாயிலாக பொது மக்களிடம் உதவிக் கோரிய 67 வயது தந்தையின் முயற்சி வீண்போகவில்லை.
ஓய்வுப் பெற்ற அரசு ஊழியரான எம். சின்னக்கருப்பனின் சமூக ஊடகப் பதிவை screenshot எடுத்து, அதனை கிராமத்து மக்களின் whatsapp குழுவில் யாரோ பகிர்ந்தால், அச்செய்தி வைரலாகி பொது மக்களின் கவனத்தைப் பெற்றது.
பலர் சொந்தமாக நன்கொடைத் திரட்டியதில் பதிவுக் கட்டணமான 3,000 ரிங்கிட் பணம் வெறும் இரண்டே மணி நேரங்களில் வசூலானது.
கிராம மக்கள் மற்றும் பொது மக்களின் அந்த நன்கொடையின் மூலம் மகளை UMK பல்கலைக்கழகத்தில் முதல் நாளில் பதிய முடிந்ததாக சின்னக்கருப்பன் நெகிழ்ச்சியுடன் சொன்னார்.
UMK-வில் விருந்தோம்பல், சுற்றுலா மற்றும் வளப்பம் துறையில் இளங்கலைப் பட்டப்படிப்பு மேற்கொள்ள 20 வயது கலைமகளுக்கு வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் பல்கலைக்கழகத்தில் பதிவதற்கான 3,000 ரிங்கிட் சின்னக்கருப்பனிடத்தில் இல்லை.
கலைமகள் தவிர்த்து, மேலும் 3 பிள்ளைகளின் படிப்புச் செலவுகளை நான் பார்க்க வேண்டியுள்ளது.
போதாக்குறைக்கு நான் ஏற்கனவே நரம்பியல் நோயாலும் ஆஸ்மாவாலும் பாதிக்கப்பட்டுள்ளேன் என, மாதம் 700 ரிங்கிட் சம்பளம் பெறும் சின்னக்கருப்பன் அந்த வைரல் செய்தியில் கூறியிருந்தார்.
இவ்வேளையில் விஷயம் காதுக்கு எட்டியதும் UMK துணை வேந்தர் அலுவலகம் Program UMK Cakna திட்டத்தின் கீழ் கலைமகளுக்கு 1,000 ரிங்கிட் ரொக்கம், மடிக்கணினி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பரிசுக் கூடைகளை வழங்கியது.
கலைமகள் UMK-வில் பட்டப்படிப்பை மேற்கொள்ள MARA தலைவர் டத்தோ Dr Asyraf Wajdi Dusuki-யும் உதவியிருப்பது குறிப்பிடத்தக்கது.