Latestஇந்தியா

விலை உயர்வால் இந்தியாவில் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை குறையும் என கணிப்பு

மும்பை, நவம்பர் 3 – தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால், இந்தியாவில் இந்த ஆண்டு தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கை கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறையும் என உலக தங்க மன்றம் (World Gold Council) கணித்துள்ளது.

ஈரான் போரைத் தொடர்ந்து வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதுடன், பருவமழை குறைவால் விவசாயிகளின் வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தங்க நகைகள் வாங்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இதன் காரணமாக, 2026ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த தங்கத் தேவை சுமார் 650 மெட்ரிக் டன்னாகக் குறையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்று மாதங்களில், இந்தியாவின் தங்கத் தேவை 29 விழுக்காடு குறைந்து 162.5 மெட்ரிக் டன்னாகப் பதிவானது. இதில், தங்க நகைகள் வாங்குவது 20 விழுக்காடும், முதலீட்டுக்காகத் தங்கம் வாங்குவது 40 விழுக்காடும் குறைந்துள்ளது.

எனினும், தீபாவளி மற்றும் திருமணக் காலத்தை முன்னிட்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடையும் காலாண்டில் தங்கத்தின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உலக தங்க மன்றத்தின் இந்தியப் பிரிவு தலைமைச் செயல் அதிகாரி சச்சின் ஜெயின் (Sachin Jain) தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!