Latestவிளையாட்டு

வெற்றியை கணிக்கும் தங்க மீன்; 14 உலகக் கிண்ண ஆட்டங்களைத் துல்லியமாக கணித்த ‘ஸ்விம்பாப்பே’

டொரோண்டோ, ஜூன்-20 – கால்பந்தாட்ட முடிவுகளைக் கணிப்பதில் Paul the Octopus என்ற கணவாய் தான் இதுநாள் வரை உலகளவில் பிரபலமாக இருந்தது.

தற்போது அந்த இடத்திற்கு புதிய ‘ஜோசியர்’ வந்துள்ளார்.. அதுவும் செதில்களோடு!

அவர்தான் கனடா, டொரோண்டோவில் நடக்கும் உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளில் தன் துல்லியமான கணிப்புகளால் கலக்கிக் கொண்டிருக்கும் ‘ஸ்விம்பாப்பே’ (Swimbappé) என்ற குட்டி தங்கமீன்.

​பிரான்ஸ் கேப்டன் கிலியன் எம்பாப்பேயின் (Kylian Mbappé) நினைவாகப் பெயரிடப்பட்ட இந்த குட்டி மீன், டொரோண்டோவில் ஒரு மினி கால்பந்து மைதானம் போன்ற மீன் தொட்டியில் வசித்து வருகிறது.

போட்டி தொடங்குவதற்கு முன்பு, இரண்டு நாடுகளின் கொடிகள் தொட்டியின் மேல் வைக்கப்படும்.

தண்ணீருக்குள் சிறிது நேரம் தீவிரமாக யோசித்து, எந்த நாடு ஜெயிக்கும் என்று ஸ்விம்பாப்பே நீந்திச் செல்கிறதோ, அதுதான் அதன் கணிப்பு.

இதுவரை நடந்த ஆட்டங்களில் ஜெர்மனி, பிரான்ஸ், அர்ஜென்டினா மற்றும் கட்டாரை வீழ்த்திய கனடாவின் வெற்றி உட்பட 14 ஆட்டங்களின் முடிவுகளை இந்த மீன் துல்லியமாகக் கணித்துள்ளது.

வெறும் 4 முறை மட்டுமே இதன் கணிப்பு தவறியுள்ளது.

​தற்போது இந்த மீனின் கணிப்பு என்னவென்றால், அடுத்த ஆட்டத்தில் கால்பந்து உலகின் ஜாம்பவானான பிரேசிலை வீழ்த்தி Haiti அணி வரலாற்று வெற்றி பெறும் என்பதே…

​ஸ்விம்பாப்பேயின் இந்த அசாத்திய கணிப்பு நிஜமாகுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!