Latestமலேசியா

புகைமூட்டம் தீவிரம்; சரவாக் செரியானில் அனைத்து பள்ளிகளும் இன்று தற்காலிக மூடல்!

கூச்சிங், செப்டம்பர்-24,சரவாக்கில் புகைமூட்டம் மோசமடைந்ததைத் தொடர்ந்து, செரியான் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

API எனப்படும் காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு 200-ரைக் கடந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சரவாக் மாநில கல்வி இலாகா தெரிவித்துள்ளது.

இதன்படி, செரியான் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 108 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் காலத்தில், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க வீட்டிலிருந்தவாறே கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகள், PdPR முறையில் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு செரியானில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை எட்டியிருந்தது.

API அளவு 201 முதல் 300 வரை பதிவானால், அது மிகவும் ஆரோக்கியமற்ற காற்றுத் தரமாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, மாணவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக கூறியுள்ள கல்வி இலாகா, காற்றின் தரம் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!