
சுங்கை பூலோ, செப்டம்பர்-26 – PLUS மற்றும் NKVE விரைவுச்சாலையில் நேற்று மாலை முதல் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் வாகனமோட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
மழை மற்றும் பலத்த காற்று காரணமாக நெடுஞ்சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் இந்த நெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதன் விளைவாக 5 கிலோ மீட்டருக்கும் மேலாக வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
குறிப்பாக ஜாலான் டூத்தா டோல்
சாவடியை இரவு 7.30 மணிக்குக் கடந்த வாகனங்கள், சுங்கை பூலோ R&R வந்தடைய இரவு 9 மணி வரை, அதாவது ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகப் பாதிக்கப்பட்ட பயணிகள் சமூக வலைத்தளங்களில் அதிருப்தி தெரிவித்ததை காண முடிந்தது.
வெள்ளிக்கிழமை வேலை முடிந்து வீடு திரும்பியவர்களுக்கு, வழக்கத்திற்கு மாறான இந்த போக்குவரத்து நெரிசல் தேவையற்ற மனஉளைச்சலை ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை…



