Latestமலேசியா

வெஸ்ட் கண்ட்ரி (கிழக்கு) தமிழ்ப்பள்ளியில் மாபெரும் தொழில் முனைவோர் தின விழா கோலாகலம்

காஜாங், ஆகஸ்ட்-9 – சிலாங்கூர், காஜாங், தேசிய வகை வெஸ்ட் கண்ட்ரி (கிழக்கு) தமிழ்ப்பள்ளியில் தொழில் முனைவோர் தின விழா (Hari Keusahawanan) நேற்று பள்ளி வளாகத்தில் மிகச் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நடைபெற்றது.

​கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுடன் சேர்த்து, மாணவர்களிடையே உள்ள தனித்துவமான திறமைகளை வெளிக்கொணர்வதற்கும் வணிகப் பயிற்சியை அளிப்பதற்கும் முக்கியத்துவம் வழங்கும் நோக்கில் இம்மாபெரும் விழா ஏற்பாடு செய்யப்பட்டதாகப் பள்ளியின் தலைமையாசிரியை சீதா முனியாண்டி தெரிவித்தார்.

​காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 30-க்கும் மேற்பட்ட பல்வகை உணவுச் கடைகள், பொழுதுபோக்கு விளையாட்டுகள், பேய் வீடு (Haunted House), கோமாளி வித்தை மற்றும் உள்ளூர் கலைஞர்களின் கலைப்படைப்புகள் எனப் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றன.

​மேலும், பார்வையாளர்களைக் கவரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட அதிர்ஷ்டக் குலுக்குச் சீட்டுப் போட்டியில், முதல் பரிசாக 55 அங்குல Smart TV உட்படப் பல்வேறு கவர்ச்சிகரமான பரிசுகள் வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்டன.

​மாணவர்களின் வணிகத் திறனை மேம்படுத்தும் வகையில் அமைந்த இவ்விழாவுக்குப் பொது மக்கள் திரளாக வருகை தந்து ஆதரவு வழங்கியதாக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஜெயகாந்தன் ஜெயசீலன் மகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்.

​இவ்விழா வெகுசிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் பள்ளி சார்பாக மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக் கொள்ளப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!