Latestமலேசியா

ஈப்போவில் வேன் கவிழ்ந்து விபத்து: 9 பேர் காயம்

ஈப்போ, செப்டம்பர் 23 – ஈப்போவிலுள்ள லிட்டில் இந்தியா அருகே, சுகாதார அமைச்சிற்குச்
வேன் விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உட்பட 9 பேர் காயமடைந்தனர். அந்த வேனில் மொத்தம் 11 பேர் பயணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை, தஞ்சோங் ரம்புத்தானிலுள்ள சுகாதார அமைச்சின் பயிற்சி நிறுவனத்திலிருந்து புந்தோங் சுகாதார கிளினிக்கிற்குச் சென்றுகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றது. பயிற்சி செவிலியர்கள் நடைமுறைப் பயிற்சிக்காக கிளினிக்கிற்குச் சென்றுகொண்டிருந்தனர்.

இவ்விபத்தில் மற்றொரு வாகனமும் தொடர்புபட்டுள்ளதாக ஈப்போ மாவட்ட காவல்துறைத் தலைவர் அசிஸ்டன் கமிஷனர் முஹம்மது நஜிப் ஹம்சா (Asisten Komisioner Muhammad Najib Hamzah) தெரிவித்தார். இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!