
கோலா கிராய், செப்- 23-கிளந்தானில் ஈராண்டுகளுக்கு முன் வகுப்பறையில் ஐந்தாம் வகுப்பு மாணவரின் முகத்தில் உதைத்து காயப்படுத்தியதை குற்றத்தை ஒப்புக் கொண்ட முன்னாள் KAFA ஆசிரியருக்கு ஈராயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் 33 வயது Abdullah Mustakim நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என Kuala Krai மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.
2024 அக்டோபர் 23ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் பள்ளியில் சமய வகுப்பின் போது, 11 வயது மாணவரின் முகத்தில் வலது காலால் உதைத்து வேண்டுமென்றே காயப்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 323-ன் கீழ் Abdullah மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு வரை சிறைத்தண்டனை, 2,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது அவை இரண்டுமே விதிக்கப்படலாம்.
பொது நலனைக் கருத்தில் கொண்டு அத்தகைய குற்றங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க உரிய தண்டனை வழங்க வேண்டும் என அரசுத் தரப்பு முன்னதாக வலியுறுத்தியது. இந்நிலையில், வேலையை இழந்துள்ளதுடன் மாதம் 1,000 ரிங்கிட் மட்டுமே சம்பாதித்து மனைவி மற்றும் மூன்று குழந்தைகளைப் பராமரித்து வருவதால் அவருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.



