
ஷா ஆலாம், மே-13,ஷா ஆலம், புக்கிட் கெமுனிங்கில் 14 வயது சிறுவன் ஒருவன் சிறைபிடிக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அதிர்ச்சிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தலைமறைவாகியுள்ள சந்தேக நபரைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கைப்பேசி இணையச் சேவை தருவதாக ஆசை வார்த்தை கூறி, அச்சிறுவனை சந்தேக நபர் செக்ஷன் 32-ல் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு சிறுவனின் கை, கால்கள் கட்டப்பட்டு ஓரினப் புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது.
சந்தேக நபர் வெளியே சென்றிருந்த நேரத்தில், அச்சிறுவன் படுக்கையறை ஜன்னல் வழியாக உதவி கோரி சத்தமிட்டுள்ளான்.
இதைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சிறுவனை மீட்டதுடன், உடனடியாக போலீஸுக்கும் தகவல் கொடுத்தனர்.
இச்சம்பவம் குறித்து கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் காயம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தகவல் தெரிந்தவர்கள் ஷா ஆலாம் போலீஸைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



