Latestமலேசியா

ஹலால் சான்றிதழ் விவகாரத்தை பொது வெளியில் வைத்து பேசியது ஏன்? செப்பூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக் தன்னிலை விளக்கம்

செப்பூத்தே, செப்டம்பர் -9 – ஹலால் சான்றிதழைக் கட்டாயமாக்கும் உத்தேசத் திட்டம் குறித்து பொது வெளியில் தான் கருத்துக் கூறியதை, செப்பூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக் (Teresa Kok) தற்காத்துப் பேசியுள்ளார்.

மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளைப் பெறாமல், பொது நிகழ்வில் முதலில் அது குறித்து பேசியதே சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் நாயிம் மொக்தார் (Na’im Mokhtar) தான்.

பன்றி இறைச்சி மற்றும் மதுபானம் பரிமாறாத அனைத்து உணவகங்களுக்கும், பானங்கள் விற்கும் கடைகளுக்கும் ஹலால் சான்றிதழைக் கட்டாயமாக்க உத்தேசிக்கப்பட்டிருப்பதாக நாயிம் கூறியிருந்தார்.

எனவே, அவ்விவகாரத்தை பக்காத்தான் ஹாராப்பான் வாயிலாக கொண்டுச் செல்ல தனக்கு வாய்ப்பேற்படவில்லை என, DAP-யின் தேசிய உதவித் தலைவருமான திரேசா சொன்னார்.

PH வாயிலாக அவ்விவகாரத்தை திரேசா அணுகியிருக்கலாமென, பிரதமர் முன்னதாக கடிந்துக்கொண்டார்.

திரேசாவின் பேச்சு தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதாக டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

எனினும், ஒரு MP என்ற முறையில் அனைத்துச் சமூகங்களின் குரலாக விளங்கும் வகையிலேயே அந்த ஹலால் சான்றிதழ் முடிவை மறு ஆய்வு செய்யுமாறு அரசாங்கத்தைத் கேட்டுக் கொண்டேன்.

அது நடைமுறைக்கு வந்தால் சிறு வியாபாரிகளுக்கு கூடுதல் சுமையேற்படும், பயனீட்டாளர்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும், பன்முக கலாச்சாரத்தைப் பாதிக்கும் என்றேன்.

அதற்காக JAKIM-மையோ இஸ்லாத்தையோ நான் மதிக்கவில்லை என்று அர்த்தமாகி விடாது என திரேசா கோக் தெளிவுப்படுத்தினார்.

திரேசாவின் பேச்சுக்கு எதிராக இதுவரை 5 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!