Latestமலேசியாவிளையாட்டு

ஃபீபா தர வரிசையில் 3 இடங்கள் முன்னேறிய Harimau Malaya; தற்போது 135-வது இடம்

கோலாலம்பூர், ஜூன்-21 – தேசியக் கால்பந்து அணி ஃபீபா (FIFA) உலகத் தர வரிசையில் 3 இடங்கள் முன்னேறி 135-வது இடத்தைப் பிடித்துள்ளது.

ஏப்ரல் மாதம் 138-வது இடத்திலிருந்த Harimau Malaya-வின் அண்மைய அடைவுநிலையில் காணப்பட்ட முன்னேற்றமே, அவ்வுயர்வுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

குறிப்பாக 2026 உலகக் கிண்ண மற்றும் 2027 ஆசியக் கிண்ண தகுதிச் சுற்று ஆட்டங்களிள் முடிவுகள் அதற்கு பெரிதும் உதவியிருக்கின்றன.

அதில், கிர்கிஸ்தானுடன் ( Kyrgyzstan) அதன் சொந்த அரங்கில் 1-1 என சமநிலைக் கண்ட தேசிய அணி, பின்னர் புக்கிட் ஜாலில் அரங்கில் தைவானை 3-1 என தோற்கடித்தது.

உலகக் கிண்ணத்தின் மூன்றாம் கட்ட தகுதிச் சுற்றுக்கு மலேசியா தகுதிப் பெறாவிட்டாலும், ஆசியக் கிண்ணத்தில் பங்கேற்க இன்னும் வாய்ப்பிருக்கிறது.

Kim Pan-Gon-னைப் பயிற்றுநராகக் கொண்ட Harimau Malaya, அடுத்து செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறவிருக்கும் Pestabola Merdeka கால்பந்துப் போட்டியிலும் AFF கிண்ணக் கால்பந்தும் போட்டியிலும் பங்கேற்கவுள்ளது.

FIFA தர வரிசையில் மேலும் உயருவதற்கு, அவ்வாட்டங்களின் முடிவும் மலேசியாவுக்கு முக்கியமாகும்.

2027 ஆசியக் கிண்ணக் கால்பந்துப் போட்டிக்கான குலுக்கல் FIFA தர வரிசையைப் பொருத்து மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!