கோலாலம்பூர், மே 10 – Azam Bakiயின் MACC தலைமை ஆணையர் பதவி மேலும் ஒரு ஆண்டுக் காலத்திற்கு நீட்டிக்கப்பட்டது.
மே 12 ஆம்தேதியிலிருந்து இது அமலுக்கு வருவதாக அரசாங்க தலைமைச் செயலாளர் Tan Sri Mohd Zuki Ali தெரிவித்தார்.
அவரது நியமனத்திற்கு மாட்சிமை தங்கிய பேரரசர் Sultan Ibrahim அனுமதி வழங்கியிருக்கிறார்.
கடந்த ஆண்டு கட்டாய ஓய்வுக்குப் பின் இரண்டாவது முறையாக அவரது சேவை தற்போது நீட்டிக்கப்பட்டது.
இதற்கு முன் கடந்த ஆண்டு மே 12ஆம் தேதி முடிந்த Azam Bakiயின் சேவைக் காலம் முதல் முறையாக ஒரு ஆண்டிற்கு நீட்டிக்கப்பட்டது.
டாக்டர் மகாதீர் முகமட் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் கவிழ்ந்ததைத் தொடர்ந்து MACC யின் தலைமை ஆணையர் பதவியிலிருந்து Latheefa Koya விலகிய பின்னர் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் தேதி MACC தலைமை ஆணையராக Azam Baki நியமிக்கப்பட்டார்.