Latestமலேசியா

அடையாளக் கார்டு இல்லாவிட்டாலும் நாடற்றவர்கள் சட்டப்பூர்வமாக திருமணம் செய்யலாம் – உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

கோலாலம்பூர், ஜூலை 16 – மலேசியாவிலுள்ள நாடற்றவர்கள் மலேசியாவின் அடையாளக் கார்டு இன்றி சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ள முடியும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மலேசிய அதிகாரிகள் இந்தகைய திருமணங்களை அடையாளக்கார்டு இல்லாமலேயே இனி பதிவு செய்ய முடியும் எனஒரு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பேராவைச் சேர்ந்த நாடற்ற பெண் ஒருவரும் அவரது மகளும் மலேசியர்களுடனான தங்களது திருமணத்தை பதிவு செய்ய முடியாததால் மூன்று தலைமுறையாக நாடற்றவர்களாக இருந்தனர். 46 வயதான கமலாதேவி கன்னியப்பன், அவரது இரண்டு பிள்ளைகள் மற்றும் அவரது மூன்று மூன்று பேரக்குழந்தைகளுக்கு ஆதரவாக அவர்கள் மலேசியர்கள் என மே 20 ஆம் தேதி தைப்பிங் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் கமலாதேவியும் அவரது மகளும் தங்களது திருமணத்தை தேசிய பதிவுத் துறையில் பதிவு செய்து கொள்ள முடியும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கமலாதேவிக்கு மலேசியாவில் தாத்தா பாட்டி இருக்கின்றனர். அவரது தாயார் லட்சுமிக்கு பிறப்பு பத்திரம் இருந்தபோதிலும் அவர் இறக்கும்வரை மலேசிய அடையாளக் கார்டை கொண்டிருக்கவில்லை. இதன் காரணமாக மலேசியருடனான தனது திருமணத்தை கமலாதேவி பதிவு செய்யமுடியவில்லை. இதனால் கமலாதேவியும் அவரது மூன்று பிள்ளைகளும் நாடாற்றவர்களாக இருந்தனர். இந்த நிலையில்தான் மலேசியாவில் திருமணத்தை பதிவு செய்வதற்கு அடையாளக் கார் டு தேவையில்லை என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!