Latestஇந்தியா

அதிகாரத்தைக் கைப்பற்ற BRS தலைவர்கள் ‘சூனியம்’ செய்ததாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு

தெலுங்கானா, ஆகஸ்ட்-17- BRS தலைவர்கள் அதிகார மோகத்தில் மிகவும் கீழ்நிலைக்கு இறங்கி விட்டதாகவும், அவர்கள் மாந்திரீகத்தில் ஈடுபடுவதாகவும் தெலங்கானா முதலமைச்சர் ஏ. ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். விவசாயிகளின் துயரத்தை அதிகரிக்கவும் தெலங்கானாவில் பதற்றத்தை ஏற்படுத்தவும் BRS தலைவர்கள் முயல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியான BRSசின் முன்னாள் அமைச்சர் ஒருவர் கோயில்களுக்குச் சென்றது குறித்த விவரங்கள் ஏன் ரகசியமாக வைக்கப்பட்டன என்றும் ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார். இருப்பினும், முதலமைச்சர் சம்பந்தப்பட்டவர்களின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை.

BRSசின் மூத்த தலைவர் ஒருவர் மாந்திரீகச் சடங்குகளைச் செய்ததாக இதற்கு முன் காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்தது. அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியில் BRS தலைவர்கள் மிகவும் கீழ்த்தரமான நிலைக்குச் சென்று விட்டதாகவும், மாநிலத்தில் நெருக்கடியை உருவாக்கும் நோக்கில் அவர்கள் பில்லி சூனியம் போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் அது கூறியிருந்தது. அதே சமயம் மேலும் சில தலைவர்களும் அத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.

அரசியலில் ‘மாந்திரீகம்’ பயன்படுத்தப்படுவதாக வரும் குற்றச்சாட்டுகள் புதியவை அல்ல. அத்தகைய அதிருப்திகள் தொடர்ந்து இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!