வாஷிங்டன், ஜூலை 3 – அமெரிக்கா, வாஷிங்டனில், கடந்த வாரம் நடைபெற்ற, அதிபர் தேர்தல் விவாதத்தில், தனது மோசமான அடைவுநிலைக்கு, இடைவிடாத சர்வதேச பயணங்களே காரணம் என, அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் குற்றம்சாட்டியுள்ளார்.
“இது சாக்கு போக்கு அல்ல. மாறாக, விளக்கம்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவாததிற்கு முன், உலக நாடுகளை வலம் வந்தது, அவ்வளவு விவேகமான செயல் அல்ல என்பதையும் பைடன் ஒப்புக் கொண்டுள்ளார்.
“நான் எனது பணியாளர்களின் அறிவுரைகளை கேட்கவில்லை. அதனால், விவாத மேடையில் கிட்டத்தட்ட தூக்கிவிட்டேன்” எனவும் அவர் கூறியுள்ளார்.