அகமதாபாத், மே 23 – பிரபல பாலிவுட் நடிகரும் , Kolkata Knight Riders கிரிக்கெட அணியின் உரிமையாளருமான ஷாருக் கான் திடீர் உடல் நலக் குறைவினால் நேற்று பிற்பகலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெப்ப அலைகள் மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக KD மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்தனர். ஷாருக் கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியானதைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் மருத்துவமனைக்கு வெளியே கூடினர்.
அவரது நிலைமை அவ்வளவு மோசமாக இல்லையென்பதால் விரைவில் வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டது. கோல்கத்தா Knight Riders குழுவுக்கும் Sunrisers Hyderabad குழுவுக்குமிடையிலான கிரிக்கெட் ஆட்டத்தை பார்வையிடுவதற்காக இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஷாருக் கான் Ahmedabad வந்திருந்தார்.