அந்தரங்க படங்களைக் காட்டி மிரட்டல்; முன்னாள் காதலியை கடத்திய மருத்துவர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டார்

சிங்கப்பூர், ஆகஸ்ட் 7 – சிங்கப்பூரில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர், தனது முன்னாள் காதலியை தொடர்ந்து வற்புறுத்தி வந்ததோடு மட்டுமல்லாமல், அந்தரங்க புகைப்படங்களைக் காட்டி மிரட்டியதைத் தொடர்ந்து அவரைக் கடத்திச் சென்ற வழக்கில் நீதிமன்றத்தில் இன்று குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு அப்பெண் தனது அடுக்குமாடி குடியிருப்பிற்கு திரும்பியபோது அந்நபர் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்து, வீட்டில் பொருட்களை வீசி, மடிக்கணினி மற்றும் ஹேர் ட்ரையரை எடுத்துச் சென்றதோடு மட்டுமல்லாமல் சண்டையின் போது அப்பெண்ணை காயமடைய செய்துள்ளார்.
மேலும் நெருக்கமான புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டலும் விடுத்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு அந்தப் பெண் அலுவலகத்திலிருந்து வெளியேறியபோது, அவரை வலுக்கட்டாயமாக தனது காரில் இழுத்துச் சென்று கதவை பூட்டியுள்ளார்.அடைக்கப்பட்ட வீட்டிலிருந்து குதித்து ஓடி பாதுகாப்பு அதிகாரியை அணுகி உதவியும் பெற்றுள்ளார்.
போலீசால் வெற்றிகரமாக கைது செய்யப்பட்ட அந்நபருக்கு தக்க தண்டனை வழங்கப்படுமென்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் மருத்துவச் செலவுகள் மற்றும் பாதிப்புகளுக்கான நஷ்டஈடு வழங்கப்படும் என்றும் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.