கோலாலம்பூர், ஜூன் 27 – இந்த சனிக்கிழமையன்று அன்வாருக்கு எதிராக Demi Negara இயக்கம் நடத்த திட்டமிட்டிருக்கும் எதிர்ப்பு பேரணிக்கு எதிராக போலீஸ் எச்சரித்துள்ளது. இந்த பேரணி நடத்துவது தொடர்பில் அதன் நில உரிமையாளரான Perbadanan PutraJaya விடம் அமைதி பேரணி சட்டம் (736 )இன் கீழ் அனுமதி பெறவேண்டும். ஆனால் பேரணியை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள “Rakyat Lawan Anwar” ஏற்பாட்டாளர் அனுமதியின்றி அதனை நடத்தினால் சட்டத்தை மீறியதாக கருதப்படுவர் என கோலாலம்பூர் போலீஸ் தலைவர் Rusdi Isa தெரிவித்தார்.
பேரணி நடத்துவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னதாக முன்கூட்டியே போலீஸ் அனுமதிக்கான விதிமுறைக்கு ஏற்ப அவர்கள் ஜூன் 14 ஆம் தேதி போலீசிற்கு அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். எனினும் பேரணி நடத்தப்படும் இடத்தின் உரிமையாளரிடம் அனுமதி பெறவேண்டும் என்று சட்டத்தில் நிபந்தனை இடம்பெற்றுள்ளதை ருஸ்டி சுட்டிக்காட்டினார். இந்த எச்சரிக்கையை மீறி Demi Negara பேரணியை நடத்தினால் 736 ஆவது சட்டத்தின் செக்சன் 9 உட்பிரிவு (5 ) இன் கீழ் விசாரணை நடத்தப்படும் என ருஸ்டி கூறினார். புத்ரா ஜெயாவிலுள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான Seri Perdana முன் அந்த பேரணி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.