Latestமலேசியா

அமெரிக்காவின் போர் விமானங்களில் பல விழுந்தன; அனைத்து விமானிகளும் பாதுகாப்புடன் உள்ளனர்

இஸ்தான்புல், மார்ச் 2 – அமெரிக்க போர் விமானங்களில் பல இன்று காலையில் விழுந்தன.

எனினும் அதன் விமானிகள் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதாக குவைத் தற்காப்பு அமைச்சை மேற்கோள் காட்டி Anadolu செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.

தேடும் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டதோடு அந்த போர் விமானங்களின் விமானிகள் உடனடியாக கண்டுப்பிடிக்கப்பட்டு அவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டுச் சென்று தேவையான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் இப்போது அமெரிக்க இராணுவத்துடன் நேரடியாக ஒருங்கிணைந்து செயல்பட்டு கூட்டு தொழில்நுட்ப நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

விமானங்கள் கீழே விழுந்த சம்பவத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய தற்போது விசாரணை நடந்து வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!