இந்தியானா, ஜூன் 5 – அமெரிக்கா, இந்தியானா மாநிலத்தில், மின் கம்பிகளுக்கு மிக அருகில் சென்றதால், வெப்ப காற்று பலூன் ஒன்றில் தீப்பற்றியது.
சம்பவத்தின் போது, அந்த வெப்ப காற்று பலூனில் பயணித்த, ஓட்டுனரும், இரு பயணிகளும் கடுமையான தீப்புண் காயங்களுக்கு இலக்கானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு நேரப்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை, மாலை மணி ஏழு வாக்கில் அவ்விபத்து நிகழ்ந்தது.
மின் கம்பிகளுக்கு மிக அருகில் பயணிக்கும் வெப்ப காற்று பலூனில் தீப்பற்றும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களிலும் வைரலாகியுள்ளது.
சம்பந்தப்பட்ட பலூன் மின் கப்பிகளை மோதவில்லை. எனினும், மின் கம்பிகளுக்கு அருகில் சென்றதால், அனல் காற்று பட்டு அதில் தீ ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதனால், திடல் ஒன்றில் அந்த வெப்ப காற்று பலூன் விழுந்து விபத்துக்குள்ளாகும் காட்சிகளும் அந்த காணொளியில் இடம் பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.