
வாஷிங்டன், ஜூலை-14 – அமெரிக்கா–ஈரான் இடையிலான மோதல் மூன்றாவது நாளாகத் தீவிரமடைந்துள்ளது.
அதிபர் டோனல்ட் ட்ரம்பின் உத்தரவின் பேரில், ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
குறிப்பாக, ஈரானின் முக்கியத் துறைமுக நகரமான பந்தர் அப்பாஸில் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதலின் எதிரொலியாக, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 9 விழுக்காட்டுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இது அனைத்துலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
தாக்குதல்கள் தொடரும் என எச்சரித்துள்ள ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களுக்கு 20 விழுக்காட்டு கட்டணம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
மேலும், அந்த நீரிணையில் அமெரிக்க இராணுவம் தனது முற்றுகை நடவடிக்கையை மீண்டும் தொடங்கியுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஸி, ஹோர்முஸ் நீரிணையின் உண்மையான பாதுகாவலன் ஈரான்தான் என்று அழுத்தமாகக் கூறியுள்ளார்.
உலகின் எண்ணெய் போக்குவரத்தில் மிக முக்கியமான இந்தச் கடல் பகுதியில் நிலவும் பதற்றம், அனைத்துல எரிசக்தி பாதுகாப்புக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.



