
அமெரிக்கா, செப்டம்பர் 23 – கடந்த சனிக்கிழமை அமெரிக்கா ஒக்லஹோமா (Oklahoma) நகரிலுள்ள புலிகள் பாதுகாப்பகத்தில் நடைபெற்ற விலங்குகள் நிகழ்வில், புலி ஒன்று திடீரென பயிற்றுவிப்பாளரைத் தாக்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பகத்தின் உரிமையாளரான உயிரிழந்த அந்நபர் அந்தப் புலியை சிறு குட்டியாக இருந்தபோதே வளர்த்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த துயர சம்பவத்தை மரணமடைந்த ஆடவரின் மனைவி மற்றும் அவரின் மகள் நேரில் கண்டதாகவும், புலி கடித்து விட்டு விலகியதும் மனைவி உடனே கூண்டுக்குள் சென்று விலங்கினை வேறு கூண்டுக்குள் அடைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.