Latestமலேசியா

அமைச்சரவையில் இருந்து நீக்கப்போவதாக லிம் குவான் எங்கை மிரட்டினேனா?- துன் மகாதீர் மறுப்பு

ஷா அலாம் , ஜூன் 27 -2018 ஆம் ஆண்டில் பக்காத்தான் ஹராப்பான் நிர்வாகத்தில் அப்போது நிதியமைச்சராக இருந்த DAP யின் தலைவர் லிம் குவான் எங்-கை ( Lim Guan Eng ) அமைச்சரவையிலிருந்து நீக்கப்போவதாக தாம் மிரட்டியதாக வெளியான தகவலை முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் மறுத்துள்ளார். அப்போதைய அரசாங்க உறுப்பினராகவும் DAP- யின் தலைவராகவும் இருந்த லிம் குவான் எங் பதவிக்கு தாம் எப்போதும் மதிப்பு வழங்கியதாக அவர் கூறினார். லிம் குவான் எங்கை அமைச்சரவையிலிருந்து நீக்கப்போவதாக தாம் மிரட்டியதில்லை. இது ஒரு முழு பொய்யாகும் என மகாதீர் தெரிவித்தார்.

லிம் குவான் எங் DAP- யின் தலைவராக இருந்ததோடு பக்காத்தான் ஹராப்பான் உறுப்புக் கட்சியாகவும் DAP இருந்துள்ளது. அவரது நிலைக்கு நான் மரியாதை தந்துள்ளேன். அப்போது கல்வி அமைச்சராக இருந்த டாக்டர் மஸ்லி மாலேக்கை ( Maszlee Malek) மட்டுமே நான் பதவி நீக்கம் செய்தேன் என நேற்று தமது முகநூலில் மகாதீர் பதிவிட்டார். 2018ஆம் ஆண்டில் தமது அரசாங்க நிர்வாகத்தில் நிதி அமைச்சராக இருந்தபோது அமைச்சரவை முன்னிலையில் தம்மை நீக்கப்போவதாக மூன்று முறை டாக்டர் மகாதீர் மிரட்டியதாக லிம் குவான் எங் கூறியிருந்தார். 2018 ஆம் ஆண்டு பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் கொள்கை அறிக்கையில் வழங்கப்பட்ட வாக்குறுதியை அமல்படுத்தும் நோக்கத்தை கொண்டிருந்தபோது மகாதீர் தமக்கு இந்த மிரட்டலை விடுத்ததாக லிம் குவான் கூறியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!