கோலாலம்பூர், ஆகஸ்ட் 15 – அமைச்சரவை மாற்றம் குறித்து பிரதமருக்கே தெரியாத நிலையில், நம் யாரும் அது குறித்து புரளியைக் கிளப்ப வேண்டாம் என்று தொழில் முனைவர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் கூறியுள்ளார்.
ஒருவேளை மாற்றம் நடைபெறுமாயின் அது குறித்து பிரதமரே அறிவிப்பார். யார் அந்த அமைச்சரவை மாற்றத்தைச் செய்வர்கள் என்பதை குறித்தும் அவரே கருத்துரைத்துரைப்பார் என அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து மாற்று கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டாம் என்று நேற்று நடைபெற்ற ‘ஸ்வர்ண சமரோஹா’ (Swarna Samaroha) சிறப்பு ஒடிசி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசினார் ரமணன்.
கடந்த சில வாரங்களாகவே அமைச்சரவை மாற்றம் குறித்து பல்வேறு ஆருடங்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகக்து.
அதில் ஒரு முழு அமைச்சர் நீக்கப்பட்டு மாநில மந்திரி பெசார் ஒருவரும் துணையமைச்சர் ஒரு சிலரும் அமைச்சர்களாக நியமிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியிருந்தன.