Latestமலேசியா

அம்பாங் மருத்துவமனையில் ‘நீர்வீழ்ச்சி’: கனமழையால் கூரை இடிந்து வார்டுகளில் வெள்ளம்

அம்பாங், ஏப்ரல்-29-அம்பாங் மருத்துவமனையில் நேற்று பெய்த கனமழையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மருத்துவமனையின் கூரை இடிந்து விழுந்ததில், மழைநீர் அருவி போல வார்டுகளுக்குள் புகுந்தது.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

அறுவை சிகிச்சை அரங்கு மற்றும் நடைபாதைகளில் நீர் சூழ்ந்ததால், CT Scan போன்ற மருத்துவ உபகரணங்களை பாதுகாக்க ஊழியர்கள் போராடினர்.

இந்த விபத்தால் தகவல் தொழில்நுட்ப அமைப்பும் பாதிக்கப்பட்டு, நோயாளிகளின் விவரங்களை கைப்பட எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டது.

என்றாலும், மருத்துவமனை நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டது.

பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு, உபகரணங்களின் பாதுகாப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

முக்கியமாக, வெள்ளம் புகுந்த அறுவை சிகிச்சை அரங்கு இன்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விரைவான மீட்புப் பணிகளால் மருத்துவமனை இயல்பு நிலைக்குத் திரும்புகிறது.

மாற்றப்பட்ட சிகிச்சை நேரங்கள் குறித்து நோயாளிகளுக்கு விரைவில் அறிவிக்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!