Latestமலேசியா

கர்ப்பிணி மனைவியை தாக்கிய ஆடவன் – 7 நாட்கள் தடுத்து வைப்பு

சுங்கைப் பட்டாணி, ஏப்-29-Ambangan Heights-சிலுள்ள தங்களது வீட்டில் கடந்த வியாழக்கிழமை தனது கர்ப்பிணி மனைவியை தாக்கியதில் அப்பெண் கருச்சிதைவுக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்குரிய ஆடவன் விசாரணைக்காக ஏழு நாட்களுக்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளான்.

அந்த நபரை தடுத்து வைக்கும் உத்தரவை மாஜிஸ்திரேட் முகமட் அஸ்லான் பஸ்ரி இன்று பிறப்பித்தார்.

பாதிக்கப்பட்ட 39 வயது அரசு ஊழியரான அந்த பெண் 12 வாரங்களாக கர்ப்பமாக இருந்ததாகவும், துணி ஹெங்கர்கள், ரப்பர் குழாய், கூட்டுமார் போன்ற பொருட்களால் தாக்கப்பட்டுள்ளார்.

மேலும் அந்த நபர், அப்பெண்ணின் வயிற்றில் குத்தியதோடு , துடைப்புக் கம்பு உடையும் வரை அடித்ததாகவும் கூறப்படுகிறது.

அப்பெண்ணின் இடது கையும் விரல்களும் முறிந்திருந்தன, மேலும் அவரது முகம் கடுமையாகக் காயமடைந்திருந்தது என்று அவரது சகோதரர் தெரிவித்தார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!