கோலாலம்பூர், மே 21 – அரசாங்கத்தை குறைகூற முடியும் ஆனால் மூன்று ஆர் எனப்படும் சர்ச்சைக்குரிய இனம், சமயம் மற்றும் ஆட்சியாளர்கள் விவகாரத்தில் ஒரு வரம்பு இருப்பதாக பிரதமர் டத்தோ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். ஊடக சுதந்திரத்தில் கலவரம் மற்றும் பொது பாதுகாப்புக்கு மிரட்டல் ஏற்படும் நடவடிக்கைகளுக்கு தாம் அனுமதிக்க முடியாது என Talk To Al Jazeera நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்க் காணலில் அன்வார் தெரிவித்தார்.
ஊடக சுதந்திரத்திற்கான குறியீட்டு இடத்தில் நாம் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டாலும் பரவாயில்லை, ஊடக சுதந்திரம் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் இனம், சமயம் மற்றும் ஆட்சியாளர்கள் விவகாரத்தில் கை வைத்தால் அல்லது அது தொடர்பான அம்சங்களில் வரம்பு மீறி கலவரத்தை தூண்டுவோருக்கு எங்களது நாட்டில் இடமில்லையென Al Jazera தொலைக்காட்சி நிலையத்தின் Sami Zeidan னுக்கு வழங்கிய நேர்க்காணலில் அன்வார் கூறினார்.