Latestமலேசியா

அரச மலேசிய கடற்படையின் லெப்டனன் சிவசுதன் தஞ்சப்பன் உட்பட 7 அதிகாரிகள் ஹெலிகாப்டர்கள் விபத்தில் பலி

கோலாலம்பூர், ஏப் 23 – லுமுட்டில் இன்று காலை அரச மலேசிய கடற்படையின் Fennec ஹெலிகாப்டரும் HOM ஹெலிகாப்டரும் வானில் மோதியபின் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் அரச மலேசிய கடற்படையின் லெப்டனன் Sivasutan Thanjappan உட்பட ஏழு அதிகாரிகள் பலியாகினர்.

Fennec ஹெலிகாப்டரில் அதன் ஓட்டுனர் Muhamad Amir bin Mohamadருடன் அதிலிருந்த லெப்டனன் சிவசுதன், Mohd Shahrizan bin Mohd Termizi ஆகியோர் இறந்தனர்.

அதே சமயத்தில், அரச மலேசிய கடற்படையின் ஹெலிகாப்டர் பிரிவைச் சேர்ந்த HOM ஹெலிகாப்டரில் இருந்த லெப்டனன் Muhammad Firdaus bin Ramli, லெப்டனன் Wan Rezaudeen Kamal bin Wan Zainal Abidin, லெப்டனன் Mohammad Amirulfaris bin Mohamad Marzukhi , Muhammad Faisol bin Tamadun ஆகியோர் இருந்தனர்.

ஒட்டுமொத்தமாக அந்த இரண்டு ஹெலிகாப்டர்களிலும் இருந்த 10 பேர் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த நால்வருடன் அந்த ஹெலிகாப்டரில் இருந்த பொதுமக்களில் மூவரும் பயணம் செய்துள்ளனர். அவர்களைப் பற்றிய அடையாளம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

அரச மலேசிய கடற்படையின் ஆண்டு நிறைவு விழா இந்த சனிக்கிழமையன்று நடைபெறவிருப்பதால் அதன் அணிவகுப்புக்காக இன்று காலையில் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தபோது அவ்விரண்டு ஹெலிகாப்டர்களும் மோதிக்கொண்ட பின் கீழே விழுந்து விபத்துககுள்ளாகியுள்ளன.

இதனிடையே இந்த விபத்து குறித்து அரச மலேசிய கடற்படை விசாரணைக் குழு ஒன்றை அமைக்கும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் நோர்டின் அறிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!