Latestமலேசியா

அலோர் ஸ்டாரில் பெற்றத் தாயை தீ வைத்துக் கொளுத்திய மகன் ஏழு நாட்களுக்கு தடுத்து வைப்பு

அலோஸ்டார், மார்ச் 3 – அலோஸ்டார் , Jalan Tok Keling கில் உள்ள வீட்டில் வெறித்தனத்துடன் தனது தாயாருக்கு தீயூட்டியதாக நம்பப்படும் ஆடவன் ஒருவனை விசாரணைக்காக ஏழு நாட்களுக்கு தடுத்து வைக்கும் உத்தரவை போலீசார் பெற்றனர். அலோஸ்டார் நீதிமன்ற வளாகத்தில் மாஜிஸ்திரேட் Nur Syifa Mohd Hamzah அந்த நபருக்கு எதிரான தடுத்து வைக்கும் உத்தரவை பிறப்பித்தார். கொலை செய்ததன் தொடர்பில் குற்றவியில் சட்டத்தின் 302 ஆவது விதியின் கீழ் இன்று முதல் மார்ச் 9ஆம் தேதிவரை அந்த சந்தேகப் பேர்வழியை தடுத்து வைக்கும் உத்தரவு பெறப்பட்டது.

மாற்று திறனாளிக்கான கார்டை வைத்திருந்த மனநிலை பாதிக்கப்பட்ட அந்த ஆடவனை காலை மணி 8.30 அளவில் நீதிமன்ற லோக்காப்பிற்கு போலீசார் கொண்டு வந்தனர். 2019ஆம் ஆண்டிலிருந்து குடும்பப் பிரச்னையால் அந்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக நம்பப்பகிறது. வெறித்தனமாக செயல்பட்ட அந்த நபர் நேற்று தனது தாயாருக்கு தீயூட்டியதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. தீக்காயங்களுடன் அவனது தாயார் வீட்டில் இறந்த நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!