அலோஸ்டார், ஜூலை 16 – அலோஸ்டார் , Jalan kundor ரில் நிகழ்ந்த தீ விபத்தில் ஐந்து வீடுகள் சேதம் அடைந்ததோடு , அந்த சம்பவத்தில் ஆடவர் ஒருவர் உயிர்தப்பினார். தீ விபத்துக்குள்ளான வீட்டில் சிக்கிக்கொண்ட அந்த ஆடவர் சுவாசிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கியதைத் தொடர்ந்து உடனடியாக ஆம்புலன்ஸ் வண்டியில் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.
நேற்று பிற்பகல் மணி 2 அளவில் நிகழ்ந்த அந்த தீவிபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் எட்டு நிமிடங்களுக்குள் பாதிக்கப்பட்ட இடத்திற்கு Jalan Raja தீயைணைப்பு மற்றும் மீட்பு படையினர் சென்றடைந்ததாக அதன் அதிகாரி Wan Azizul Hakim Wan Jaafar தெரிவித்தார். அந்த தீவிபத்தில் புரோட்டோன் வீரா காரும் சேதம் அடைந்தது. இந்த பேரிடருக்கான காரணம் மற்றும் இழப்பு தொடர்பான மதிப்பீடுகள் குறித்து இன்னும் விசாரணை நடைபெற்று வருவதாக Wan Azizul Hakim கூறினார்.