
குவாந்தான், மார்ச்-3-புனித நூலான அல் குர்ஆனை காலால் மிதித்து அவமதிப்பு செய்ததாக மலேசிய பஹாங் அல்-சுல்தான் அப்துல்லா பல்கலைக்கழக மாணவர் இன்று குவாந்தான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
எனினும், எஸ். விக்னேஸ்வரன் குற்றச்சாட்டை மறுத்து விசாரணைக் கோரினார்.
இஸ்லாத்தை அவமதிக்கும் நோக்கத்துடன் ஒரு புனித பொருளை அவமதித்ததாக குற்றச்சாட்டில் கூறப்பட்டு, குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுச் செய்யப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
மேலும், குர்ஆனை மிதித்தபடி எடுத்த புகைப்படத்தை பதிவேற்றியதன் மூலம் இணைய வசதிகளை தவறாக பயன்படுத்தியதாகவும் விக்னேஸ்வரன் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த குற்றச்சாட்டு 1998-ஆம் ஆண்டு தொடர்பு – பல்லூடகச் சட்டத்தின் கீழ் சாட்டப்பட்டது.
அதனையும் அவர் மறுத்து விசாரணைக் கோரினார்.
இந்த பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் RM500,000 அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.



