
சைபர்ஜெயா, அக்டோபர் 16 –
மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) தாக்கல் செய்த அவதூறு வழக்கில், ஷா ஆலாம் உயர் நீதிமன்றம், ‘Murray Victor Hunter’-ஐ குற்றவாளி எனத் தீர்மானித்தது.
கடந்தாண்டு ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரை, ஹன்டர் வெளியிட்ட கட்டுரைகள் MCMC-க்கு எதிராக தவறான மற்றும் அவதூறு தகவல்களை கொண்டிருந்தன. அந்த வெளியீடுகள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்பி, பொதுமக்களைத் தவறாக வழிநடத்தி, ஆணையத்தின் மதிப்புக்கு சேதம் விளைவித்தன.
நீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பு, கருத்துச் சொல்லும் சுதந்திரம் சட்ட வரம்புக்குள் பொறுப்புடன் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. பிறரின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் தவறான அல்லது தீங்கிழைக்கும் தகவல்களைப் பரப்புவது சுதந்திர உரிமைக்குள் வராது எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.
தனது நிறுவனப் பெயரின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்கவும், பொறுப்புணர்வு, நேர்மை மற்றும் நெறிமுறை தகவல் பரிமாற்றம் போன்ற அடிப்படை மதிப்புகளை உறுதிப்படுத்தவும், இந்த வழக்கு தொடுக்கப்பட்டதாக MCMC தெரிவித்தது.