Latestமலேசியா

ஆப்பிள், ஆரஞ்சு போன்ற உள்ளூர் அல்லாத பழங்கள் உள்ளிட்ட சில இறக்குமதிகள் மீதான SST வரியை அரசாங்கம் மறுபரிசீலனை செய்யும்; துணைப் பிரதமர் தகவல்

பாங்கி, ஜூன்-19 – பழங்கள் உட்பட குறிப்பிட்ட சில இறக்குமதி பொருட்களுக்கான, விற்பனை மற்றும் சேவை வரியான SST மறுஆய்வு செய்யப்படலாம்.

துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி அதனைத் தெரிவித்துள்ளார்.

ஆப்பிள், மாண்டரின் ஆரஞ்சு போன்று உள்நாட்டில் பயிரிடப்படாமல், முழுக்க முழுக்க வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பழங்களும் அவற்றிலடங்கும் என்றார் அவர்.

நிதி அமைச்சும் பொருளாதார அமைச்சும் அதனை ஆராய்ந்து வருவதாக அவர் சொன்னார்.

பழங்கள் மீதான வரி விதிப்பின் மூலம் அப்படியொன்றும் பெரிய வருவாய் அரசாங்கத்திற்கு கிடைத்து விடவில்லை; எனவே அவற்றுக்கு வரி விதித்தால், விலையும் உயர்ந்து விடும் என்றார் அவர்.

இறக்குமதியாகும் பழங்களுக்கும் SST வரி விதிப்பதானது சிந்தனைக்கு எட்டாத ஒன்றென, பிரபல Mydin பேங்கராடியின் நிர்வாக இயக்குநர் அலி மைடின் மொஹமட் முன்னதாக குறை கூறியிருந்தார்.

இறக்குமதி பொருட்களும் இந்நாட்டு அடிதட்டு மக்களால் உட்கொள்ளப்படுதை அவர் சுட்டிக் காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!