கோலாலம்பூர், ஆகஸ்ட் 9 – 12 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆட்டம் எனும் தனதுப் பிரபல நடனப் போட்டியை மீண்டும் ஆஸ்ட்ரோ கொண்டுவருகிறது. பிரபலமான நடனக் கலைஞர்களாக வேண்டும் என்றத் தங்கள் கனவுகளை நனவாக்கத் தகுந்தத் தளத்தைத் தேடும் அனைத்து ஆர்வமுள்ள மலேசிய நடனக் கலைஞர்களையும் இப்போது முதல் ஆகஸ்டு 21 வரை Virtual என்னும் மெய்நிகர் ஆடிஷனில் பங்கேற்க ஆஸ்ட்ரோ அழைக்கிறது.
மெய்நிகர் ஆடிஷனில் பங்கேற்கப் போட்டியாளர்கள்; 6 உறுப்பினர்களைக் கொண்டக் குழு நடனத்தைக் காணொளியாகப் பதிவுச் செய்த பின்னர் ஆஸ்ட்ரோ உலகம் அகப்பக்கம் வாயிலாக விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்து அசல் நடனக் காணொளியைச் சமர்ப்பிக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்படும் 50 குழுக்கள் நேர்முகத் தேர்வில் பங்கேற்க அழைக்கப்படுவர்.
ஆட்டம் போட்டியின் வெற்றியாளர்களுக்கு முதலாம் பரிசாக 50,000 ரிங்க்கிட், இரண்டாம் பரிசாக 25,000 ரிங்க்கிட், முன்றாம் மற்றும் நான்காம் பரிசு ஒவ்வொரு குழுக்கும் தலா 5,000 ரிங்க்கிட்டும் ஐந்தாம் & ஆறாம் நிலைக்கு ரொக்கமும் வழங்கப்படும். மேல் விபரங்களுக்கு ஆஸ்ட்ரோ உலகம் எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.