சிட்னி, ஆகஸ்ட்-12 – வடகிழக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஹில்டன் ஹோட்டலின் மேற்கூரையில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில், விமானி கொல்லப்பட்டார்.
குவின்ஸ்லாந்தின் (Queensland) கெய்ர்ன்ஸ் (Cairns) நகரில் திங்கட்கிழமை அதிகாலை நிகழ்ந்த அச்சம்பவத்தில் ஹோட்டல் மேற்கூரையில் தீப்பிடித்ததாவும் போலீஸ் கூறியது.
ஹெலிகாப்டரில் வேறு எவரும் இல்லையென தெரிவிக்கப்பட்டது.
இதனால் பாதுகாப்புக் கருதி, ஹோட்டலில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர்.
ஹெலிகாப்டரின் உடைந்த காற்றாடியின் பாகங்கள் அங்கிருந்த நீச்சல் குளத்தில் போய் விழுந்தது.
ஹெலிகாப்டர் விழுந்ததில் தீப்பிடித்து ஹோட்டல் மேற்கூரையில் கரும்புகை எழும்பியப் புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.
ஆஸ்திரேலியப் போக்குவரத்துப் பாதுகாப்புத் துறையின் விசாரணை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.