Latestஉலகம்

இங்கிலாந்துக்கு மீண்டும் ஏமாற்றம்; EURO கிண்ணத்தை நான்காவது முறையாகக் கைப்பற்றி ஸ்பெயின் சாதனை

பெர்லின், ஜூலை-15, மிகவும் பரபரப்புடன் நடைபெற்ற EURO 2024 கால்பந்துப் போட்டியின் இறுதியாட்டத்தில் ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தைத் தோற்கடித்து சாம்பியனானது.

ஆட்டம் முடிய 4 நிமிடங்கள் இருந்த போது Mikel Oyarzabal ஸ்பெயின் அணியின் வெற்றிக் கோலை அடித்தார்.

இதன் மூலம் நான்காவது முறையாக EURO கிண்ணத்தைக் கைப்பற்றி ஸ்பெயின் வரலாறு படைத்தது.

அது ஏற்கனவே 1964, 2008, 2012-ஆம் ஆண்டுகளில் EURO கிண்ணத்தை வென்றுள்ளது.

அதோடு இம்முறை குழு நிலையிலான ஆட்டங்கள் தொடங்கி இறுதியாட்டம் வரை அனைத்து 7 ஆட்டங்களிலும் வெற்றிப் பெற்று மற்றொரு சாதனையும் அது ஏற்படுத்தியுள்ளது.

இவ்வேளையில், இறுதியாட்ட தோல்வி இங்கிலாந்தை மீண்டும் ஏமாற்றமடையச் செய்துள்ளது.

கடந்த முறையும் இறுதியாட்டம் வரை முன்னேறிய அவ்வணி இத்தாலியிடம் தோல்வியுற்றது.

எனவே இம்முறை எப்படியாவது EURO கிண்ணத்தோடு நாடு திரும்ப வேண்டுமென்ற இங்கிலாந்தின் அணியின் கனவை ஸ்பெயின் கலைத்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!