கோலாலம்பூர், ஜூலை 11 – தற்போது சமூக வலைத்தளங்களில் நடைபெற்றுவரும் பகடி வதை விவகாரத்திற்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என ம.இ.கா அறைகூவல் விடுத்துள்ளது.
பலர் போலி கணக்கு அல்லது போலி மின் அஞ்சல் ஐ.டி கொடுத்து சமூக வலைத்தள கணக்கை பதிவு செய்து கொண்டு பகடி வதையை செய்து வருகின்றனர். இதனால் சம்பந்தப்பட்டவர்கள் பிரச்னை வந்தவுடன் காணாமல் போய்விடுகின்றனர்.
போலி கணக்கை வைத்துள்ளவர்களை கண்டறிவதும் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. அண்மையில் பகடி வதை காரணமாக உயிரை மாய்த்துக் கொண்ட விவகாரத்திலும் போலி கணக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதால் இனி டிக் டோக் போன்ற கணக்கை பதிவு செய்வதற்கு அடையாளக் கார்டை பயன்படுத்த வேண்டும் என இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அசோஜன் கேட்டுக் கொண்டார்.