கோலாலம்பூர், மே 17 – இன்று அதிகாலை Ulu Tiramமில் (JI) எனப்படும் Jemaah Islamiyah உறுப்பினர் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்படும் என்ற கருத்தை அரச மலேசிய போலீஸ் படை நிராகரித்தது. Ulu Teram காவல்நிலையத்தில் (JI) உறுப்பினர் நடத்திய தாக்குதல், குறிப்பாக தாக்குதலுக்கான நோக்கம் குறித்து இன்னும் உன்னிப்பாக விசாரிக்கப்பட்டு வருவதாக போலீஸ் படைத் தலைவர் Tan Sri Razarudin Husain தெரிவித்திருக்கிறார். அதே வேளையில் போலீஸ் நிலையத்தில் உள்ள உறுப்பினர்கள் உட்பட அனைத்து உறுப்பினர்களும் கவனமாக இருப்பதோடு பாதுகாப்பை அதிகரித்து , கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி வலியுறுத்தப்பட்டுள்ளதாக Razarudin கூறினார்.
Ulu Tiram போலீஸ் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் அந்த தாக்குதலுக்கான நோக்கம் உட்பட நாங்கள் முழுமையாக விசாரித்து வருகிறோம். விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இன்னொரு தாக்குதல் நடக்கும் என்று அனுமானம் செய்வது நல்லதல்ல என்று அவர் கூறினார்.
Ulu Tiram போலீஸ் நிலையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோது அவர் இதனை தெரிவித்தார். இந்த நிகழ்வில் ஜோகூர் போலீஸ் தலைவர் கமிஷனர் M Kumarரும் கலந்துகொண்டார். இதனிடையே போலீஸ் தேவைகளை மறுபரிசீலனை செய்வதாகவும், அதன் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் நிலையத்தை சுற்றி விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் Razarudin கூறினார்.