Latestஉலகம்

இத்தாலியத் தீவில் சொகுசுக் கப்பல் கவிழ்ந்தது; 4 சடலங்கள் மீட்பு

போர்த்திகேலோ, ஆகஸ்ட்-22, இத்தாலியின் சிசிலி (Sicily) கடற்கரையில் சொகுசு கப்பல் கவிழ்ந்த சம்பவத்தில் காணாமல் போன அறுவரில் நால்வரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதையடுத்து அச்சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.

வெளிநாட்டு சுற்றுப்பயணிகளை ஏற்றிச் சென்ற அக்கப்பல் முன்னதாக மோசமான வானிலைக் காரணமாகக் கவிழ்ந்தது.

காணாமல் போனவர்களில், பிரிட்டன் தொழில்நுட்ப கோடீஸ்வரர் மைக் லிங்க் (Mike Lynch) அவரின் பதின்ம வயது மகள் ஹானாவும் (Hannah) அடங்குவர்.

Lynch-கின் மனைவி, ஒரு வயது குழந்தையை வைத்திருந்த பெண் உள்ளிட்ட 15 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.

பிரிட்டன், நியூசிலாந்து, இலங்கை, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 22 பேர் கப்பலில் பயணித்ததாகத் தெரிவிக்கபட்டது.

கடலோர போலீஸ் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள், காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!