
கோலாலம்பூர், ஜூலை-24- இந்திய நாட்டு பயனீட்டாளர்களைக் குறிவைத்து ஆபாச இணையத்தளங்களை விளம்பரப்படுத்தும் கும்பலொன்று முறியடிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 1-ஆம் தேதி கோலாலம்பூர் ஜாலான் துன் ரசாக்கில் call centre என்ற போர்வையில் இயங்கி வந்த வணிகத் தளத்தை போலீஸ் முற்றுகையிட்ட போது அவ்விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.
பதிவுப் பெற்ற ஒரு நிறுவனத்தின் கீழ் வெளிநாட்டினர் குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு கடந்த 3 மாதங்களாகவே ஆபாச உள்ளடக்கங்களை அக்கும்பல் நேரலையாக வழங்கி வந்துள்ளது.
ஆர்வமுள்ளோர் அந்த இணையத்தளத்தை like செய்து share செய்தால், அவர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு ஆபாச உள்ளடக்கங்கள் இலவசமாகக் கிடைக்கின்றன.
அதுவே பிரத்தியேக உள்ளடக்கங்கள் வேண்டுமென்றால், அடிப்படை உறுப்பினர் கட்டணமாக RM4.89 வரையிலும், பிரீமியம் உறுப்பினராக RM 24.46 வரையிலும் VIP உறுப்பியத்துக்கு அதிகபட்சம் RM97.84 கட்டணமும் விதிக்கப்படுகிறது.
like மற்றும் share எண்ணிக்கைப் போதவில்லை என்பது போன்ற நிபந்தனை மீறல்களுக்கு கூடுதல் கட்டணங்களும் விதிக்கப்படுகின்றன.
நீண்ட வீடியோக்களைப் பார்த்தால் bitcoin மற்றும் வெகுமதி புள்ளிகள் கிடைக்கும் என்றும் நம்ப வைக்கப்படும் பயனர்கள், கட்டணம் செலுத்தியதும் தொடர்பு துண்டிக்கப்பட்டு ஏமாற்றப்படுகின்றனர்.
இதையடுத்து 3 வெளிநாட்டவர் உட்பட 57 பேர் கைதாகினர். அவர்களுக்கு ஒரு நாளைக்கு 3,000 ரிங்கிட் வீதம் மாதமொன்றுக்கு 60,000 ரிங்கிட் வரையில் சம்பளம் வழங்கப்படுகிறது. 6 பேர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட வேளை, 51 பேர் அரசு தரப்பின் சாட்சிகளாக மாறியதால் விடுவிக்கப்பட்டனர்.