
திருவனந்தபுரம், அக்டோபர்-26,
இந்தியாவில் பரம ஏழ்மையிலிருந்து விடுபட்ட முதல் மாநிலமாக கேரளா
அறிவிக்கப்படவுள்ளது.
வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்.
அவ்விழாவில் பிரபல நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி, நடிகரும் அரசியல்வாதியுமான கமல் ஹாசன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.
இந்த பரம ஏழ்மை ஒழிப்புத் திட்டம் 2021-ஆம் ஆண்டு கேரள அரசால் தொடங்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் 64,006 குடும்பங்கள் பரம ஏழ்மையில் இருப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு வீடு, நிலம், சுகாதாரம், மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.
அதன் பலனாக 59,277 குடும்பங்கள் தற்போது கடும் வறுமையிலிருந்து மீண்டுள்ளன.
அனைத்து ஊராட்சி அமைப்புகளின் ஒன்றுபட்ட முயற்சியால் கிடைத்த இச்சாதனை, கேரளாவின் சமூக நலத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்பாகும் என மாநில அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.



