கோலாலம்பூர், ஏப்ரல் 2 – Gopio எனப்படும் மலேசிய இந்திய வம்சாவளி அமைப்பு, ARSP எனும் சர்வதேச ஒத்துழைப்புக்கான இந்திய கவுன்சிலுடன் இணைந்து கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் புலம்பெயர்ந்த இந்தியர்களின் பங்கு குறித்து இக்கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதாக இந்நிகழ்ச்சியின் தலைவரும் கோபியோவின் செயலாளருமான Ravendiran Arjunan தெரிவித்தார்.
புலம்பெயர்ந்த இந்தியர்கள் சார்ந்த ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சி இளைஞர்களுக்கும் விழிப்புணர்வாக அமைந்ததாகப் பங்கேற்பாளர் ஒருவர் வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்து கொண்டார்.புலம்பெயர்ந்தோருடன் உறவுகளை மேம்படுத்தும் வகையில் முதன்முறையாக ஏற்பாடு செய்திருந்த இக்கலந்துரையாடல் கடந்த மார்ச் 31 ஆம் திகதி அன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய கலாச்சார மையத்தில் நடைபெற்றது.