Latestமலேசியா

இந்துவான தந்தை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டார்; கல்லறையைத் தோண்டியெடுக்க மகன் செய்த விண்ணப்பம் நிராகரிப்பு

சிரம்பான், டிசம்பர்-21,ஒர் இந்துவான தனது தந்தை இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டதாகக் கூறி, அவரின் கல்லறையைத் தோண்டியெடுக்க மகன் செய்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

Roseli Mahat எனும் 51 வயது ஆடவர் கடந்தாண்டு ஜூலையில் செய்திருந்த விண்ணப்பத்தை, சிரம்பான் உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

1941-ல் பிறந்த Mahat Sulaiman, 2017 செப்டம்பரில் மரணமடைந்த போது, சிரம்பான் சிக்காமாட் இஸ்லாமிய மையத்துக் கொல்லையில் அடக்கம் செய்யப்பட்டார்.

ஆனால், தனது தந்தை இறக்கும் வரை பாபா ஞோஞா இந்துவாகவே வாழ்ந்ததாகவும், அவரை தவறாக இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்திருப்பதாகவும் வழக்கு மனுவில் Roseli குறிப்பிட்டிருந்தார்.

மலேசிய அரசாங்கம், தேசியப் பதிவுத் துறை, நெகிரி செம்பிலான் அரசாங்கம், MAINS எனப்படும் நெகிரி செம்பிலான் இஸ்லாமிய சமயத் துறை, அரச மலேசியப் போலீஸ் படை ஆகியத் தரப்புகளை அவர் பிரதிவாதிகளாகப் பெயர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் அம்மனுவை தள்ளுபடி செய்யுமாறு MAINS தரப்பு முன்வைத்த கோரிக்கையை ஏற்று, சிரம்பான் உயர் நீதிமன்றம் Roseli-யின் விண்ணப்பத்தை நிராகரித்தது.

தந்தை அடக்கம் செய்யப்பட்டதில் கவனக்குறைவு நிகழ்ந்திருப்பதாகக் கூறும் புகார்தாரர், அது யாரென்பதை குறிப்பிடவில்லை; அது தவிர, தந்தை இறந்த ஆறாண்டுகளுக்குப் பிறகே அம்மனுவைச் செய்துள்ளார்.

எனவே கால வரம்பை மீறிய விண்ணப்பத்தை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என பிரதிவாதிகள் தரப்பு வாதிட்டது.

அதை விட முக்கியமாக, இறந்தவர் ஓர் இந்துவா முஸ்லீமா என்பதை நிர்ணயிக்கும் அதிகாரம் ஷாரியா நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது; சிவில் நீதிமன்றம் அதில் தலையிட முடியாதென அவர்கள் சுட்டிக் காட்டினர்.

அந்த வாதங்களையும் நீதிபதி ஏற்றுக் கொண்டார்.

இவ்வேளையில் சிரம்பான் உயர் நிதிமன்றத்தின் அத்தீர்பை எதிர்த்து மேல் முறையீட்டு நீதிமன்றம் செல்லவிருப்பதாக வாதியான Roseli-யின் வழக்கறிஞர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!