ஜாகார்த்தா, மே-8 – பூமியில் விழுந்த வால் நட்சத்திரம் என நம்பப்படும் பச்சை நிறத்திலான மர்ம ஒளிக்கதிர் இந்தோனேசியாவின் Yogjakarta வானை வெள்ளிக்கிழமையன்று அலங்கரித்தது.
எனினும் அந்த வால் நட்சத்திரம் எந்த ஒலி முழக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என அந்நாட்டு விண்வெளி ஆராய்ச்சித் துறை நிபுணர் ஒருவர் கூறினார்.
தாம் கண்காணித்த வரையில் அந்த வால் நட்சத்திரம் 6 முதல் 7 Magnitude அளவில் இருந்தது என்றார் அவர்.
உச்சக்கட்டத்தை அடையும் போது அதன் ஒளி சுக்கிரனை விட 20 மடங்கு அதிகமாக பிரகாசமாக மின்னும்.
சிறுகோளில் இருந்து உடைந்ததாக நம்பப்படும் அந்த வால் நட்சத்திரத்தில் காணப்படும் பச்சை நிறமானது, அதில் நிக்கல் செறிவு அதிகளவில் இருப்பதைக் காட்டுகிறது.
இது விண்வெளித் துறையில் நடக்கும் வழக்கமான நிகழ்வாகும்.
சராசரியாக ஒவ்வொரு 200 மணி நேரங்களுக்கும் ஒரு முறை உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வே அதுவென அவர் சொன்னார்.
இந்த வால் நட்சத்திரத்தால் பூமிக்கு பாதிப்பேதும் இல்லை என அவர் மேலும் கூறினார்.