Latestமலேசியா

டெங்கில் கோவில் தலைவர் விடுதலை: தனியார் நிலத்தில் அத்துமீறி நுழைந்த வழக்கு தள்ளுபடி

ஷா ஆலாம், ஆகஸ்ட்-6-சிலாங்கூர், டெங்கிலில் உள்ள தனியார் நிலத்தில் அத்துமீறி நுழைந்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து, ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தலைவர், ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

49 வயதான எம். பரமகுரு மீது, டத்தோ Suhaili Ahmad என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் கடந்தாண்டு ஜூனில் சட்டவிரோதமாக நுழைந்ததாக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

​ஆனால், வழக்கறிஞர் Latheefa Koya தலைமையிலான வழக்கறிஞர்களின் வாதத்தை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி Dr Hazlina Hussain, இந்த குற்றச்சாட்டில் தெளிவான குற்ற நோக்கம் குறிப்பிடப்படவில்லை எனக் கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்தார்.

முறையான, அடிப்படை இல்லாத இந்த வழக்கை தொடர்ந்து நடத்துவது நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் செயல் என்றும் நீதிபதி சுட்டிக் காட்டினார்.

இந்தத் தீர்ப்புக்கு பின் பேசிய பரமகுரு, தான் எந்த குற்ற நோக்கத்துடனும் அங்கு செல்லவில்லை என்றும், மாறாக வழிபாட்டுக்காக மட்டுமே சென்றதாகவும் தெரிவித்து நிம்மதி வெளியிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!