Latestஉலகம்

தீவிரவாதக் கருத்துகள் குறித்த சந்தேகம்: Flydubai துணை விமானிக்கு ஓமானில் ஏற்கெனவே பறக்கத் தடை

துபாய், அக்டோபர்-3,துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிஃவ் நோக்கிச் சென்ற Flydubai விமானத்தில், விமானியைத் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட துணை விமானி, ஏற்கனவே ஓமானில் விமானம் ஓட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டவர் என தகவல் வெளியாகியுள்ளது.

ஓமான் நாட்டவரான Hamam Alhammami, தீவிரவாதக் கருத்துகளைக் கொண்டிருந்ததாக எழுந்த பாதுகாப்புக் கவலைகள் காரணமாக, 2024-ஆம் ஆண்டே Oman Air-ரில் விமானப் பயிற்சிப் பணியிலிருந்து நீக்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Alhammami தனது பெரும்பாலான காலத்தை ஓமானுக்கு வெளியே, குறிப்பாக சிரியாவில் கழித்ததாகவும், அங்கு அவர் தீவிரவாதக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதன் பின்னர் அவர் Flydubai நிறுவனத்தில் துணை விமானியாகப் பணியில் சேர்ந்தது எப்படி என்பது தான் தற்போது கேள்விகளை எழுப்பியுள்ளது.

செப்டம்பர் 30-ஆம் தேதி, துபாய்–டெல் அவிஃவ் விமானப் பயணத்தின்போது, இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சரை (Smit Machchhar) அவர் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது விமானம் வேகமாக உயரத்தை இழந்த நிலையில், பயணிகளும் பணியாளர்களும் துணை விமானியை கட்டுப்படுத்தினர்.

பின்னர் விமானம் சவவூதி அரேபியாவில் பாதுகாப்பாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தின் நோக்கம் மற்றும் துணை விமானியின் பின்னணி குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!