Latestமலேசியா

இலக்கிடப்பட்ட உதவித் தொகை லஞ்சம் துடைத்தொழிப்பில் அரசாங்கம் பின்வாங்காது அன்வார் திட்டவட்டம்

புத்ரா ஜெயா, ஜூலை 2 – நாட்டை பாதுகாப்பதற்காக இலக்கிடப்பட்ட உதவித் தொகை மற்றும் பெரிய அளவில் லஞ்சத்தை துடைத்தொழிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் பின்வாங்காது என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரத்தில் பல தரப்பினரின் குறைகூறலுக்கு தாம் உள்ளாகியபோதிலும் முழுமையான மாற்றத்திற்கான நம்பிக்கையையும் பொறுப்புணர்வையும் நிறைவேற்றுவதைத் தவிர தமக்கு வேறு வழியில்லையென அவர் கூறினார். உதவித் தொகையின் நன்மை இலக்கிடப்பட்டவர்களுக்கு சென்றடையாமல் திருடு மற்றும் கடத்தல் நடவடிக்கை கும்பலுக்கு துணையாக இருப்பதை நாம் தொடர்ந்து அனுமதிக்க முடியாது.

உதவித் தொகை மூலம் சேமிக்கப்படும் பணம் மற்றும் லஞ்ச துடைத்தொழிப்பு நடவடிக்கை மூலம் திரும்ப கைப்பற்றப்படும் பணம் Rahmah உதவித் தொகை மூலம் மக்களுக்கே திரும்ப வழங்கப்படுவதாக அன்வார் தெரிவித்தார்.
நாட்டின் எல்லைப் பகுதியில உள்ள எண்ணெய் நிலையங்கள் உதவித் தொகை மூலம் வாங்கும் டீசல் எண்ணெய் அதிக அளவில் அண்டை நாட்டில் விற்கப்படுவதையும் நாம் அறிகிறோம். நமக்கு பொறுப்புணர்வு இருப்பதால் இது குறித்து நாம் கவலைப்படாமல் இருக்க முடியாது என நிதியமைச்சின் பணியாளர்களுடன் நடைபெற்ற மாதந்திர கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோது நிதியமைச்சருமான அன்வார் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!