Latestமலேசியா

இல்லாத டிஜிட்டல் நாணய முதலீட்டுத் திட்டத்தை நம்பி மோசம் போன முதியவர்; 4 லட்சம் ரிங்கிட் பறிபோனது

பத்து பஹாட், ஜூலை-7 – ஜொகூர் பத்து பஹாட்டில் இல்லாத ஒரு டிஜிட்டல் நாணய முதலீட்டை நம்பி 4 லட்சத்து 900 ரிங்கிட்டை பறிகொடுத்துள்ளார் 64 வயது முதியவர்.

முன்பின் தெரியாத நபருடன் facebook-கில் ஏற்பட்ட அறிமுகம் Whatsapp வரை தொடர்ந்த போது, அம்முதியவர் அந்த ‘முதலீட்டுத் திட்டத்தால்’ ஈர்க்கப்பட்டுள்ளார்.

இலாபம் கொட்டுமென்ற ஆசை வார்த்தைகளை நம்பி, whatsapp-பில் கொடுக்கப்பட்ட link-கை தட்டி, அதில் தனது சுயவிவரங்களையும் அவர் பதிவேற்றினார்.

ஏப்ரல் 3 முதல் ஜூன் 18 வரையிலான காலக்கட்டத்தில் 8 வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் கட்டங்கட்டமாக மொத்தம் 400,900 ரிங்கிட்டை அவர் போட்டுள்ளார்.

திடீரென ஒரு நாள், தனது முதலீட்டு கணக்கு அமெரிக்க நிதியமைச்சால் சீல் வைக்கப்பட்டு விட்டதாகவும், அதிலிருந்து விடுபட மொத்த முதலீட்டுத் தொகையில் 3% பணத்தைச் செலுத்த வேண்டுமென்றும் அந்த Whatsapp நண்பர் கூறிய போது தான், முதியவருக்கு தாம் ஏமாற்றப்பட்டிருப்பது தெரிந்தது.

இதையடுத்தே அவர் போலீசில் புகார் செய்துள்ளார்.

அச்சம்பவம் குற்றவியல் சட்டத்தின் 420-வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுவதை பத்து பஹாட் போலீஸ் உறுதிப்படுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!