6 கைத்துப்பாக்கிகள் மற்றும் 200 தோட்டாக்களுடன் கோலாலம்பூரில் கைதான இஸ்ரேலிய உளவாளிக்கு, மரண தண்டனைக் காத்திருக்கிறது!
அவனுக்குச் சுடும் ஆயுதங்களைத் தருவித்த உள்ளூரைச் சேர்ந்த தம்பதிக்கும் அதே நிலை தான் என, தேசியப் போலீஸ் படைத் தலைவர் Tan Sri Razarudin Husain கோடி காட்டியுள்ளார்.
அம்மூவருக்கும் எதிராக 1971-ஆம் ஆண்டு சுடும் ஆயுதங்கள் சட்டத்தின் 7-வது பிரிவின் கீழ் விசாரணை அறிக்கைத் திறக்கப்பட்டுள்ளது.
அப்பிரிவு, மேலும் கடுமையான தண்டனையை வழங்க வகைச் செய்யும் என்பதால், அவர்களுக்கு உச்ச தண்டனையாக மரண தண்டனைக் காத்திருப்பதாக IGP சொன்னார்.
தற்போதைக்கு அம்மூவர் மீதான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்கள் கையில் சுடும் ஆயுதங்களை வைத்திருந்ததன் உண்மை நோக்கம் என்ன என்பதைக் கண்டறிவதே தற்போதைக்கு முக்கியமாகும்.
அந்த இஸ்ரேலிய ஆடவன் விசாரணைக்காக ஏப்ரல் 7-ம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்தக் கணவன் மனைவியின் தடுப்புக் காவல் ஏப்ரல் 5-ல் முடிகிறது.
தடுப்புக் காவல் நீட்டிக்கப்படுமா இல்லையா என்பது விசாரணையைப் பொருத்தே அமையும் என IGP மேலும் கூறினார்.